×

நிதி நிறுவனம் பண மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்பு

நாமக்கல், ஆக.3: நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செங்கோடு தாலுகா, தேவனாங்குறிச்சியைச் சேர்ந்த மோகன்ராஜ், அவரது மனைவி செந்தமிழ்செல்வி ஆகியோர், கடந்த 2010ம் ஆண்டு முதல் வீடு மற்றும் திருச்செங்கோடு தெற்கு ரதவீதியில் உள்ள நடராஜா காம்ப்ளக்சில், பேங்கர்ஸ் தொழில் நடத்தி வந்தனர்.அவர்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம் இருந்து பணம் டெபாசிட் பெற்றுள்ளனர். இதற்கிடையில், மோகன்ராஜ், செந்தமிழ்செல்வி ஆகியோர் இறந்துவிட்டனர்.

அவரது மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகியோர், மோகன்ராஜ், செந்தமிழ்செல்வி ஆகியோரின் பூர்வீக சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், நிதி நிறுவனத்தில் பணம் கட்டி இழந்த, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(41) என்பவர் உள்ளிட்ட 97 முதலீட்டாளர்கள், நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிதிநிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், நாமக்கல் – சேலம் ரோட்டில், உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நிதி நிறுவனம் பண மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District Economic Crime Unit ,DSP ,Sivakumar ,Mohanraj ,Thiruchengode taluk ,Devanankurichi ,
× RELATED நாமக்கல் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ. மழை பதிவு!